சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு; 25-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்திருப்பதால், அந்த தேர்வை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது.

Update: 2022-05-18 16:11 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) 545 பணி இடங்களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றிருந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக அரசின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி வரும் சி.ஐ.டி. போலீசார், 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். 

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்திருப்பதால், அந்த தேர்வை அரசு ரத்து செய்துள்ளது. இதனால் தேர்வில் பெற்று சப்-இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என நினைத்த ஏராளமானவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்த அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ரத்து குறித்து விளக்கம் அளிக்க காலஅவகாசம் தேவை என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்