பிரதமரின் ஆலோசகராக தருண் கபூர் நியமனம்

பிரதமர் மோடியின் ஆலோசகராக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூரை நியமித்துள்ளது.

Update: 2022-05-02 22:43 GMT

புதுடெல்லி, 

மத்திய பணியாளர் அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், பிரதமர் மோடியின் ஆலோசகராக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூரை நியமித்துள்ளது.இமாசலபிரதேச பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான தருண் கபூர், பெட்ரோலியத்துறை செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். தற்போது அவர் பிரதமரின் ஆலோசகராக 2 ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்படுவதாக பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மூத்த அதிகாரிகள் ஹரிரஞ்சன் ராவ், ஆதிஷ் சந்திரா ஆகியோர் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பல உயர்மட்ட அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது நாடாளுமன்ற விவகார அமைச்சக செயலாளராக உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கியானேஷ்குமார், கூட்டுறவு அமைச்சக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு செயலாளராக இருந்த தேவேந்திரகுமார் சிங், தேசிய மனித உரிமைகள் ஆணைய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மத்திய மந்திரிசபை செயலக செயலாளராக இருந்த அகிலேஷ்குமார் சர்மா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அகிலேஷ்குமார் சர்மாவின் இடத்தில் மந்திரிசபை செயலாளராக, பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலாளராக இருந்த பிரதீப்குமார் திரிபாதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்