வெடிகுண்டுடன் விமான நிலையம் வந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் கைது
ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகரில் இருந்து டெல்லி வழியாக இண்டிகோ விமானம் மூலம் சென்னை வர இருந்த பாலாஜி சம்பத் என்ற ராணுவ வீரரின் லக்கேஜ் பையில், கையெறி வெடிகுண்டுகள் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பாலாஜி சம்பத்தை போலீசாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.