ஜம்மு காஷ்மீரின் ரியாசி காட்டுப் பகுதியில் பயங்கர தீ..!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தின் மர்ஹி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் மரங்கள் மற்றும் வனப்பகுதி பொருட்கள் அனைத்தும் கருகி வருகின்றன. இந்த தீ காட்டுப் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.