டெல்லியில் 'மாஸ்க்' அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
டெல்லியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.;
புதுடெல்லி ,
நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வந்தது . இதனால் பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தியது. குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பல மாநிலங்கள் அறிவித்தது.
இந்த நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க
பள்ளிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது .
தற்போது டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இது 4 சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு அபராதம் பொருந்தாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது