இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

இலங்கைக்கு கடனுதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்தை நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-04-22 09:12 GMT
கோப்புப் படம்
புதுடெல்லி,

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா 50 கோடி டாலர் கடனுதவி அளிக்க உள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி ஜி.எல். பெரரிஸ் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை இந்தியா இலங்கைக்கு 250 கோடி டாலர் கடனுதவி அளித்துள்ளது. இந்த நிலையில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கை மீண்டுவர டாலர் கடனுதவி இலங்கைக்கு அளிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தை (ஐஎம்எப்), மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்