2024-ம் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற புது வியூகம்: சோனியா காந்தியுடன் மீண்டும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை 3-வது முறையாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார்.

Update: 2022-04-19 10:10 GMT
புதுடெல்லி,

மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் தற்போதும் ஆளும் கட்சி வெற்றி பெற தனது வியூகங்களை  வகுத்து கொடுத்தார் பிரசாந்த் கிஷோர்.  இந்தநிலையில் டெல்லியில் பிரசாந்த் கிஷோர் 3-வது முறையாக சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி உள்ளிட்டோரும் இருந்தனர். 

இந்த  கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறும் கர்நாடகா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத் தேர்தல்கள் குறித்து இன்றையக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் செய்ய வேண்டிய வியூகம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

கடந்த நான்கு நாட்களில் பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தியை சந்திப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது

வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பணியை பிரசாந்த் கிஷோர் கவனிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்