நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பான அளவு இருக்கும்: இந்திய வானிலை மையம்
இந்தியாவில் நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பான அளவு இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி
இந்தியாவிற்கு அதிக மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கும். இந்த தென்மேற்கு பருவமழையானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடையும். இந்த நிலையில், நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி தெற்கு மேற்கு பருவமழையின் நீண்ட கால சராசரி மழை அளவு 96 % முதல் 104 % வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 99 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு என்பது 1971-2020 கால கட்டத்தின் அடிப்படையில் 868.6 மி.மீட்டராக உள்ளது.