தெலுங்கானா: அரசு கிடங்கில் பயங்கர தீ விபத்து - ரூ.38 கோடி மதிப்பிலான சீருடைகள் தீயில் நாசம்
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள அரசு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தெலுங்கானா,
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள அரசு கிடங்கில் எற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தீயில் எரிந்து நாசமாயின.
தருமபுரம் கிராமத்தில் உள்ள அரசு கிடங்கில் பள்ளிமாணவர்களுக்கான சீருடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மளமளவென எரிந்த தீ 7 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால், ரூ, 38 கோடி மதிப்பிலான சீருடைகள் தீயில் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து தொடர்பாக தருமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.