இந்தியாவுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறேன்; ஆனால்..ஷெபாஸ் ஷெரீப் பேச்சு

அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம் என்று பாகிஸ்தானில் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-11 14:06 GMT
இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70), நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு ஆகியுள்ளார். 

பாகிஸ்தானின் புதிய பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ள நிலையில், இன்று பேசிய ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:  இறைவன் 22 கோடி பாகிஸ்தான் மக்களை இன்று காப்பாற்றி உள்ளார்.  பாகிஸ்தான் மக்கள் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடுவர்.  இந்தியாவுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறேன்;ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீராமல் அது நிகழாது. அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம். 

இந்தியா- பாகிஸ்தான் என இருநாடுகளிலுமே வறுமை உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என பிரதமர் மோடிக்கு நான் அறிவுறுத்துவேன். ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முன்வருமாறு பிரதமருக்கு நான் அழைப்பு விடுப்பேன். அதன்பிறகு ஒருங்கிணைந்து வறுமைக்கு எதிராக போராடலாம்” என்றார். 

மேலும் செய்திகள்