யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு வழங்கிய கொரோனா தடுப்பூசி 185.53 கோடி; மத்திய அரசு

நாட்டில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களுக்கு 185.53 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Update: 2022-04-05 04:42 GMT


புதுடெல்லி,



இந்தியாவில் கொரோனா பரவலால் அதிகரித்த பாதிப்புகளை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.  இதன்படி, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், இணை நோய்கள் கொண்டவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

பொதுமக்களிடையே தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ள சூழலில், நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.  இதேபோன்று, நாட்டில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களுக்கு 185.53 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.  இதுதவிர, யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களிடம் 15.70 கோடிக்கும் கூடுதலான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்