திருமலையில் உகாதி ஆஸ்தானம் ஆர்ஜித சேவைகள் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (சனிக்கிழமை) உகாதி பண்டிகை மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (சனிக்கிழமை) உகாதி பண்டிகை மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம், சுத்தி, காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, விஸ்வசேனருக்கு விசேஷ சமர்ப்பணம், காலை 7 மணி முதல் 9 மணி வரை விமான பிரகாரம், கொடிமர வலம், மூலவருக்கும், உற்சவருக்கும் புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பஞ்சாங்க சிரவணம், உகாதி ஆஸ்தானம் நடக்கிறது.
உகாதி ஆஸ்தானத்தால் கோவிலில் இன்று கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது, என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.