அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லீம் இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி- யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

பாஜக வெற்றியை கொண்டாடியதால் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லீம் இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவியை யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Update: 2022-03-29 09:49 GMT
(Image: ANI/Twitter)
புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தின் காத்கரி கிராமத்தை சேர்ந்தவர் பாபர் (30). பாஜக ஆதரவாளரான இவர், சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் 20-ம் தேதி அவரை கடுமையாகதாக்கியது.  

இதில் பலத்த காயமடைந்த பாபர், சிகிச்சை பலனின்றி லக்னோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட  உயிரிழந்த பாபரின் மனைவி அளித்த புகாரின் பேரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த தகவல் உ.பி. முதல்வர் யோகிக்கும் அளிக்கப்பட்டு அவரது அலுவலகம் சார்பில் டுவிட்டர் பக்கத்தில் பாபருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் 'குஷிநகரின் காத்கரி கிராமத்தின் பாபர்ஜியின் மறைவுக்கு முதல்வர் யோகி தனதுஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இவரை அடித்துக் கொன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை விசாரித்து தமது அலுவலகத்துக்கு அறிக்கைஅளிக்கும் படியும் காவல்துறையினருக்கு யோகி உத்தரவிட்டுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடித்துக்கொல்லப்பட்ட பாபர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்தும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்