சுற்றுலா, கலாசார வளர்ச்சிக்காக புதுவை-பிரான்ஸ் அரசு இணைந்து செயல்படுகிறது- அமைச்சர் லட்சுமிநாராயணன்

சுற்றுலா, கலாசார வளர்ச்சிக்காக புதுவை-பிரான்ஸ் அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-19 22:13 GMT
பாய்மர படகு அணிவகுப்பு

பிரான்ஸ் நாட்டில் வசந்த கால திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே புதுவை சுற்றுலாத்துறையும், பிரெஞ்சு தூதரகமும் இணைந்து பாய்மர படகு அணிவகுப்பை நடத்தின.

விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், பிரான்ஸ் தூதர் லிஸ்டால்போட் பாரே ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து வைத்து பாய்மர படகு அணிவகுப்பை தொடங்கி வைத்தனர்.

20 வீரர்கள் பங்கேற்பு

இந்த பாய்மர படகு அணிவகுப்பில் 10 படகுகளில் 20 வீரர்கள் பங்கேற்றனர். பாய்மர படகு அணிவகுப்பை கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

மேலும் அவர்கள் தங்களின் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா வளர்ச்சி

விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசுகையில், ‘புதுவை அரசும், பிரான்ஸ் அரசும் நமது மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாசார வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. வருங்காலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த புதுவை அரசு, பிரான்ஸ் அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்