டெல்லியில் பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா சந்திப்பு

2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று இந்தியா வந்தார்.

Update: 2022-03-19 12:30 GMT
Image Courtesy : ANI
புதுடெல்லி ,

2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று  இந்தியா வந்தார்.இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் 

இந்த  அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று  இந்தியா  வந்தார் .டெல்லி வந்த கிஷிடோவை  மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உள்ளிட்டோர் வரவேற்றனர் 

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடி -ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா டெல்லியில் சந்தித்தனர். இன்று இரு
தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

மேலும் செய்திகள்