வாழ்வில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு வண்ணங்களை கொண்டு வரட்டும்; ஹோலி பண்டிகைக்கு பிரதமர் வாழ்த்து

பரஸ்பர அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம் ஆக உள்ள இந்த வண்ணங்களின் திருவிழா, உங்களுடைய வாழ்விலும் மகிழ்ச்சியின் ஒவ்வொரு வண்ணங்களை கொண்டு வரட்டும் என பிரதமர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Update: 2022-03-18 03:04 GMT



புதுடெல்லி,


நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  வண்ணங்களின் திருவிழா, மகிழ்ச்சி மற்றும் தீமையை, நன்மை வெற்றி கொண்டதற்கான அடையாளம் ஆக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்துக்களின் திருவிழாவாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட போதிலும், பிற மத நம்பிக்கை சார்ந்தவர்களும் ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.  நாட்டில் வசந்தகால பருவ அறுவடையின் தொடக்கத்தினை குறிக்கும் வகையில் ஹோலியை மக்கள் கொண்டாடுகின்றனர்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சியான ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

பரஸ்பர அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் ஓர் அடையாளம் ஆக உள்ள இந்த வண்ணங்களின் திருவிழாவானது, உங்களுடைய வாழ்விலும் மகிழ்ச்சியின் ஒவ்வொரு வண்ணங்களை கொண்டு வரட்டும் என தெரிவித்து உள்ளார்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஆடவர், மகளிர், சிறுவர் சிறுமியர், முதியவர்கள் என ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவியும், பூசியும் கொண்டாடுவது வழக்கம்.  இனிப்புகளை உண்டும், வண்ண பொடிகளை தூவி, நீரை ஒருவர் மீது மற்றொருவர் தெளித்து மற்றும் வண்ண பலூன்களை பறக்க விட்டும் ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்