அருகில் நின்ற மானை பிடிக்க முடியாமல் தவித்த சிறுத்தை: காரணம் என்ன? வைரல் வீடியோ..!

சிறுத்தை ஒன்று தன் அருகில் நின்றுகொண்டிருந்த மானை பிடிக்கமுடியாமல் தவித்த வீடியோ இனையத்தில் வைரலானது.

Update: 2022-03-14 13:30 GMT
புதுடெல்லி,

புதுடெல்லியை சேர்ந்த வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா, இவர் தனது டுவிட்டரில் பதிவிட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று, தன் அருகில் நின்று புல் மேய்ந்துகொண்டிருந்த மானை பிடிக்க முயன்றது. ஆனால் சிறுத்தையால் பிடிக்க முடியவில்லை. காரணம், சிறுத்தை மற்றும் மானுக்கு இடையே வேலி இருந்தது.   

இதனால், மானை பிடித்து தனக்கு உணவாக்க முடியாமல் சிறுத்தை தவித்தது. இடையே வேலி இருந்த காரணத்தினாலோ மானும் சிறுத்தையை கண்டு அஞ்சாமல் அங்கேயே நின்று புல்  மேய்ந்துகொண்டிருந்தது. 

டுவிட்டரில் வெளியான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

மேலும் செய்திகள்