‘காங்கிரசை திரிணாமுல் கட்சியோடு இணைத்து விடலாம்’ - மேற்குவங்காள தலைவர்கள் அழைப்பு

5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியால், காங்கிரசை திரிணாமுல் கட்சியோடு இணைத்து விடலாம் என்று மேற்குவங்காள தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Update: 2022-03-10 19:37 GMT
கோப்புப்படம்
கொல்கத்தா, 

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங்க மந்திரியுமான பிர்காத் ஹக்கீம் கூறுகையில், ‘5 மாநில தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் பா.ஜ.க.வை எதிர்த்து எப்படி போராடும்?. மம்தா பானர்ஜி தலைமையை ஏற்று அக்கட்சியை எங்கள் கட்சியில் இணைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் அதீர் சவுத்திரி, ‘பா.ஜ.க.வின் முக்கிய ஏஜெண்டு திரிணாமுல் காங்கிரஸ். எங்களுக்கு அவர்கள் அறிவுரை கூற வேண்டாம். கோவா மாநிலத்தில் அக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. நாங்கள் குறிப்பிட்ட இடங்களை பெற்றுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்