ஜம்மு காஷ்மீர்:உதம்பூரில் நீதிமன்ற வளாகம் அருகே குண்டு வெடிப்பு- ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீர்:உதம்பூர் மாவட்டம் நீதிமன்ற வளாகம் அருகே குண்டு வெடித்து ஒருவர் பலியானார்; 13 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-03-09 10:28 GMT
ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று மதியம் 1 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. இதில் பலத்த காயமடைந்த ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய மந்திரி  ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
 
உதம்பூரில் உள்ள தாசில்தார் அலுவலம் அருகே குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில், ஒருவரின் உயிர் பறிபோனது. 13 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான் ஸ்ரீமதி இந்து சிப் உடன் நிமிடத்திற்கு நிமிடம் தொடர்பில் இருக்கிறேன். குண்டுவெடிப்புக்கான சரியான காரணம் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்