இமாசலபிரதேசத்தில் கொரோனா காலத்தில் தற்கொலைகள் அதிகரிப்பு
முதல்-மந்திரி ஜெய் ராம் தாக்கூர், கொரோனா காலத்தில் தற்கொலைகள் அதிகரித்ததாக தெரிவித்தார்.
சிம்லா,
இமாசலபிரதேச மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதல்-மந்திரி ஜெய் ராம் தாக்கூர், கொரோனா காலத்தில் தற்கொலைகள் அதிகரித்ததாக தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “கொரோனா தொற்றின்போது இமாசலபிரதேசத்தில் 1,552 தற்கொலை சம்பவங்களும், 144 தற்கொலை முயற்சிகளும் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்தும் மார்ச் 1, 2020 மற்றும் பிப்ரவரி 1, 2022-க்கு இடையிலான காலக்கட்டத்தில் நடந்துள்ளன” என்றார்.