மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஒ. சத்ய நாதெள்ளாவின் மகன் உயிரிழப்பு..!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இந்தியர் சத்ய நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா உயிரிழந்தார்.

Update: 2022-03-01 08:07 GMT
மும்பை, 

உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்துவரும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா-வின் மகன் ஜெயின் நாதெள்ளா இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயின் நாதெள்ளாவிற்கு 26 வயதாகிறது.

ஜைன் நாதெள்ளா பிறவியிலேயே பெருமூளைவாத நோயான தசை இயக்கம், தசைநார் பெருமூளை வாதம் ஆகிய குறைகளுடன் பிறந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜைன் நாதெள்ளா மும்பையில் காலமானார். 

ஜைன் நாதெள்ளா மறைவு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இமெயிலில் நமது சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா மகன் ஜைன் நாதெள்ளா மறைவால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆந்திரத்தைச் சேர்ந்த சத்ய நாதெல்லா உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாக பணி உயர்வு செய்யப்பட்டார். பில்கேட்ஸின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மைக்ரோசாப்டில் இந்தியர் மிகப்பெரிய பதவிக்கு தேர்வானது பெரிதும் பேசப்பட்டது. 

இந்நிலையில், சத்யா நாதெள்ளாவின் மகன் இளம் வயதில் உயிரிழந்திருப்பது தொழில்நுட்ப உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சத்ய நதெள்ளாவிற்கு திவ்யா நாதெள்ளா மற்றும் தாரா நாதெள்ளா என்கிற 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்