இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர 2 விமானங்கள் இயக்கம் - இன்டிகோ நிறுவனம்
இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர 2 விமானங்கள் இயக்கப்படுவதாக இன்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி 5 சிறப்பு விமானங்கள் உக்ரைனில் இருந்து டெல்லி வந்தடைந்துள்ள.இதுவரை உக்ரைனில் இருந்து1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில், இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர ஏ321 2 விமானங்கள் இயக்கப்படும் என்று இன்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து இன்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு ஏ321 என்ற இரண்டு விமானங்கள் இயக்கப்படும். இந்த விமானங்கள் டெல்லியில் இருந்து ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்திற்கும், ஹங்கேரி புடாபெஸ்ட் விமான நிலையத்திற்கும் விமானங்கள் இன்று இயக்கப்படும். இது இந்தியாவின் “ஆபரேஷன் கங்கா” பணியின் ஒரு பகுதியாகும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.