கேரளாவில் மேலும் 5,691- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,691- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-02-22 18:54 IST
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,691- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 78 ஆயிரத்து 750- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 130- பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம்  கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  64,403- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 56,851- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தொற்றில் இருந்து  மேலும் 10,896-பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்துள்ளனர்.  

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 53,597- ஆக குறைந்துள்ளது.  கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 1,041- பேரும் கோட்டயம் மாவட்டத்தில் 655- பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்