மராட்டியத்தில் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை ரத்து - பயணிகள் கடும் அவதி

பராமரிப்பு பணி காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.;

Update:2022-02-21 04:58 IST
மும்பை, 

மராட்டிய மாநிலம் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நேற்று காலை 11.10 மணி முதல் மாலை 4.40 மணி வரை சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. எனவே காலை 11.16 மணி முதல் மாலை 4.47 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர், பன்வெலுக்கும், காலை 9.53 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை பன்வெல், பேலாப்பூர், வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

இதேபோல காலை 10.48 மணி முதல் மாலை 4.43 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, கோரேகாவுக்கும், காலை 10.45 மணி முதல் மாலை 5.13 மணி வரை கோரேகாவ், பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்