திரிணாமுல் காங்கிரசின் தேசிய பொது செயலாளராக அபிஷேக் பானர்ஜி மீண்டும் நியமனம்

திரிணாமுல் காங்கிரசின் தேசிய பொது செயலாளராக அபிஷேக் பானர்ஜி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2022-02-19 00:24 GMT
கோப்பு படம்








கொல்கத்தா,


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 20 பேர் கொண்ட புதிய தேசிய செயற்குழுவை அக்கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரியான மம்தா பானர்ஜி இந்த மாத தொடக்கத்தில் ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் புதிய தேசிய செயற்குழு கூட்டம் நேற்று (வெள்ளி கிழமை) நடந்தது.  இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  இதன்படி, திரிணாமுல் காங்கிரசின் தேசிய பொது செயலாளராக மம்தாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சந்திரிமா பட்டாச்சார்யா, சுப்ரதா பக்ஷி மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் அக்கட்சியின் துணை தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.  அரூப் பிஸ்வாஸ் பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  பிர்ஹத் ஹகீம் குழு ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ளார்.



மேலும் செய்திகள்