நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு தராத முதல்-மந்திரி மக்களை பாதுகாப்பாரா? அமித்ஷா கேள்வி
பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் முதல்-மந்திரி மக்களை பாதுகாப்பாரா என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போது அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர்,
பிரதமர் மோடிக்கு பெரோஸ்பூர் பகுதியில் பஞ்சாப் காங்கிரஸ் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை.
ஒரு நாட்டின் பிரதமர், பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் போது முதல்-மந்திரி பாதுகாப்பு வழங்கவில்லை. இந்தநிலையில் அவர் பஞ்சாப் மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவார்.
சரண் ஜித் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதாகவும் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தால் மாநிலத்திலிருந்து போதைப்பொருள் கடத்தி விற்போர் கூண்டோடு கைது செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.