உத்தரபிரதேச தேர்தல்; பகுஜன் சமாஜ் கட்சியின் 7ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் 7-வது கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மாயாவதி வெளியிட்டார்.
லக்னோ,
கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்ட தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. அங்கு கடைசி மற்றும் 7-வது கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உத்தர பிரதேசத்தில் 7ம் கட்ட தேர்தலுக்கான 47 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
அதன்படி, அட்ராவ்லியா தொகுதியில் சரோஜ் பாண்டே வேட்பாளராக களமிறங்குகிறார். ரமேஷ் சந்திரா யாதவ் கோபால்பூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.
அசாம்கர், மாவ், காசிப்பூர், வாரணாசி, பதோஹி, ஜான்பூர், மிர்சாபூர், சோன்பத்ரா உள்ளிட்ட தொகுதிகளுக்கு 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.