உ.பி சட்டசபை தேர்தல்: நாட்டை அச்சத்தில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள் - ராகுல் காந்தி வேண்டுகோள்

நாட்டை அனைத்து அச்சங்களிலிருந்தும் விடுவிக்க மக்கள் தேர்தலில் வாக்களிக்குமாறு ராகுல் காந்திகேட்டுக் கொண்டார்.

Update: 2022-02-10 05:43 GMT
லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. 11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர்.

தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கொரோனா காரணமாக, பொதுக்கூட்டம், வாகன அணிவகுப்பு போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டதால், அரசியல் தலைவர்கள் காணொலி மூலமாகவே பிரசாரம் செய்தனர்.

இந்நிலையில் இன்று உத்தரபிரதேசத்தின் 11 மாவட்டங்களில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் ராகுல் காந்தி மக்களை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தி பதிவில், “எல்லா அச்சங்களிலிருந்தும் நாட்டை விடுவிக்கவும்; வெளியே வந்து, வாக்களியுங்கள்!” என கேட்டுக் கொண்டார்.

சமீப காலமாக, நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ராகுல் காந்தி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்