2020-2021 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் வீழ்ச்சி
2020-2021 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2020-2021 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட தற்காலிக மதிப்பீட்டில் கூறப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், திருத்தப்பட்ட புதிய மதிப்பீட்டை நேற்று தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதில், பொருளாதார வீழ்ச்சி 6.6 சதவீதம்தான் என்று குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2019-2020 நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.145 லட்சம் கோடியாகவும், 2020-2021 நிதியாண்டில் ரூ.135 லட்சம் கோடியாகவும் இருந்தது. இதன்மூலம், பொருளாதாரம் 6.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், 2019-2020 நிதியாண்டில் 3.7 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது’’ என்று கூறப்பட்டுள்ளது.