டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் குளிர்: மக்கள் கடும் அவதி

டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக குளிர் காற்று வீசி வருகிறது.

Update: 2021-12-31 18:21 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் தொடர்ந்து குளிர் அதிகரித்து வருகிறது. இரண்டாவது நாளாக தொடர்ந்து குளிர் காற்று வீசி வருகிறது.

ஒரு பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் போது அது குளிர் அலையை கொண்ட பகுதியாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிக்கிறது.

தற்போது சப்தர்ஜங்கில் 3.8 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 4 டிகிரி செல்சியஸ், அயநகரில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து குளிர் காற்று வீசி வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் குளிர் காற்று வீசக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்