மராட்டியத்தில் ஒரேநாளில் 85 பேருக்கு ஒமைக்ரான் உறுதி

மராட்டியத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 252- ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-12-29 16:32 GMT
மும்பை,

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. 

இந்த நிலையில்,  மராட்டியத்தில் ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 252- ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் விமான நிலையத்தில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வருபவர்களுக்கு  ஆர்.டிபிசிஆர் பரிசோதனை கட்டயம் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்