ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்தியா தயாரிக்க வேண்டும் - ராஜ்நாத் சிங்
ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்தியா தயாரிக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் புதுடெல்லியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், குறைந்தபட்ச நம்பகத்தன்மை கொண்ட தடுப்பை மேம்படுத்தும் வகையில் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். இது நமது பாதுகாப்பு அமைப்பில் புரட்சிகரமான நடவடிக்கை.
ஹைப்பர் சோனிக் ஏவுகணை தயாரிப்பில் நாம் நமது முழு முயற்சியையும் அதில் செலுத்த வேண்டும். சில நாடுகள் மட்டுமே பெற்றுள்ள ஹைப்பர் சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை நாம் பெற வேண்டும்’ என்றார்.
ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே ஹைப்பர் சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.