புதுடெல்லி: இரவில் வாட்டும் கடும் குளிர்..!

டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.

Update: 2021-12-13 03:35 GMT
புதுடெல்லி,

தலைநகர் புதுடெல்லியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிலவரப்படி, குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்த குளிர்காலத்தில் டெல்லியில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவான  இரவாக மாறியது. 

முன்னதாக, கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை டெல்லியில் வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. அதைவிட குறைவாக இப்போது வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், தேசிய தலைநகரில் காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டு 'மோசம்' எனும் நிலையில் நீடிக்கிறது. காற்று தரக் குறியீடு 249-290 வரையிலான அளவுகளில் நீடிக்கிறது. 

டிசம்பர் 15 முதல், காற்றின் வேகம் காரணமாக காற்றின் தரம் மேம்படும் என்றும், ஆனாலும் தொடர்ந்து மோசம் எனும் தரத்திலேயே நீடிக்கும் என்றும் புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்