'ஸ்ரீ ராமாயண யாத்ரா' ரயிலுக்கு சைவ சான்றிதழ்: சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியா வழங்குகிறது
'ஸ்ரீ ராமாயண யாத்ரா' ரயில் சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியாவிடமிருந்து சைவ சான்றிதழைப் பெறுகிறது.
புதுடெல்லி,
சாத்விக் கவுன்சில் ஆஃப் இந்தியா என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது சைவ உணவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. ரயிலில் சைவ உணவு சேவைகளை ஊக்குவிக்கும் வகையில், சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியா இன்று சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் 'ஸ்ரீ ராமாயண யாத்ரா' ரயிலுக்கு சைவ சான்றிதழை வழங்குகிறது.
இந்த சான்றிதழானது ரயில் மூலமாக நாட்டின் புனித இடங்களுக்கு பயணிக்கும் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் சைவ உணவு பிரியர்களுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைவ உணவு சான்றிதழ் பெறும் ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயிலானது டெல்லியில் இருந்து புறப்பட்டு அயோத்தி, ராம் ஜன்மபூமி கோவில், ஹனுமான் கார்ஹி, சரயு காட், நந்திகிராம், பாரத்-ஹனுமான் கோயில் மற்றும் பாரத் குந்த், ஜனக்பூர், ராம்-ஜாங்கி மந்திர், சீதாமர்ஹி: சீதாமர்ஹி மற்றும் புனவ்ரா தாம், வாரணாசி, துளசி மானஸ் கோயில், சங்கத் மோச்சன் கோயில் மற்றும் விஸ்வநாத் கோயில் மற்றும் சீதா சமாஹித் ஸ்தலத்தில் உள்ள ஜானகி மந்திர் போன்ற இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலாவாக செல்லக்கூடிய பயணமாகும்.
மொத்தம் 17 நாட்கள் மேற்கொள்ளக்கூடிய இந்த ஆன்மீக பயணத்தில் பயணிகளுக்கு சைவ உணவுகள் மட்டும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.