ஆந்திராவில் புதிதாக 156- பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-11 12:18 GMT
அமராவதி, 

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து  மேலும் 188- பேர் குணம் அடைந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  20,74,708- ஆக உயர்ந்துள்ளது. 

குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  20,58,289-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14,465- ஆக உயர்ந்துள்ளது. தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை  1,954- ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்