ஜம்மு காஷ்மீரில் இரவு நேரங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் குளிர்
ஜம்மு காஷ்மீரில் குளிரானது இரவு நேரங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர்,
காஷ்மீரின் பள்ளத்தாக்கு முழுவதும் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனிக்குக் கீழே சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமர்நாத் யாத்திரைக்கான அடிப்படை முகாமாக செயல்படும் பகல்காமில் மைனஸ் 5.9 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது, இது முந்தைய நாளிலிருந்து 1 டிகிரி செல்சியஸ் குறைவாகும். ஸ்ரீநகரில் இரவு 0.5 டிகிரி செல்சியஸ் குறைந்து மைனஸ் 2.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. குல்மார்க் மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நடுங்குகிறது.
யூனியன் பிரதேசமான லடாக்கில், மைனஸ் 16.9 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவு செய்தது. அதே நேரத்தில் லே பகுதியில் இரவில் -11 டிகிரி செல்சியஸ் பதிவானது.
வடமேற்கு இமயமலையில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அடுத்த வாரம் பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.