பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலத்தில் தேசிய கொடியுடன் ஓடி வரும் மக்கள்...
தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது;
புதுடெல்லி,
முப்படை தலைமை தளப்தி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன் டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. கன்டோன்மென்ட் மயானத்தில் இருவரின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
டிசம்பர் 8-ம் தேதி குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி உட்பட 13 பேர் மரணம் அடைந்தனர்.