அரசு பள்ளியில் 107 பேருக்கு கொரோனா

பள்ளியிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-12-06 18:07 GMT
பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பாலேஒன்னூர் பகுதியில் மத்திய அரசின் நவோதயா உண்டு உறைவிட பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் என 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளியிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைதொடர்ந்து மற்ற ஆசிரியர்கள், மாணவியருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அங்கு படித்து வரும் மேலும் 38 மாணவ, மாணவிகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த பள்ளியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்