மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் வரலாறு காணாத உயர்வு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 576.94 புள்ளிகள் உயர்ந்து 56,701.66 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

Update: 2021-08-30 07:08 GMT


மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக உயர தொடங்கியது.  முதலில் 349 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில், அடுத்த 5 நிமிடங்களில் 400 புள்ளிகள் உயர்ந்து 56,526 புள்ளிகளாக இருந்தது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,820 புள்ளிகளாகவும் பின்பு 16,829 புள்ளிகளாகவும் உயர்ந்தது.

கொரோனா 2வது அலையின் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த சூழலில், கடந்த 2 நாட்களுக்கு முன் பங்கு சந்தையில் அது எதிரொலித்து சரிவை கண்ட நிலையில், இன்று உயர்வடைந்து உள்ளது.

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளில் கடந்த 2 நாட்களாக இந்தியா பதக்கங்களை அள்ளி வருகிறது.  இன்று வரை மொத்தம், ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.  இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் உயர்வு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

தொடர்ந்து அதிக அளவாக மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் உயர்வடைந்தன.  இதன்படி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத வகையில்  576.94 புள்ளிகள் உயர்ந்து 56,701.66 புள்ளிகளாக (1.03 சதவீதம்) உயர்ந்துள்ளது.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு இதுவரை இல்லாத வகையில் 167.75 புள்ளிகள் உயர்ந்து, 16,872.95 புள்ளிகளாக (1.03 சதவீதம்) உயர்ந்துள்ளது.

மும்பை பங்கு சந்தையில் டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன், மாருதி சுசுகி இந்தியா, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ ஆகியவற்றின் பங்குகள் லாபநோக்கத்துடன் காணப்பட்டன.

மேலும் செய்திகள்