தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி கேசவ ராவ் மரணம் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இரங்கல்
தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி கேசவ ராவ் மறைவுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா ஐகோர்ட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீதிபதியாக பணியாற்றி வந்தவர், பி.கேசவ ராவ் (வயது 60).உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கேசவ ராவ், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கேசவ ராவின் மறைவைத்தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக தெலுங்கானா ஐகோர்ட்டிலும், மாநிலம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளிலும் நேற்று ஒருநாள் பணிகள் ரத்து செய்யப்பட்டன. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கேசவ ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.