குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணி தொடங்கியது; 5 மாநிலத்தைச் சேர்ந்த அகதிகளுக்கு அழைப்பு

இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. 5 மாநிலத்தைச் சேர்ந்த அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்து உள்ளது.

Update: 2021-05-29 06:36 GMT
புதுடெல்லி

இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்திய அரசு. குஜராத் சத்தீஸ்கார், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ), குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கார், அரியானா மற்றும் பஞ்சாபில் உள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான், வங்காள தேசம்  மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்த மத்ததி சேர்ந்தவர்கள்   குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கீழ் குடியுரிமை பெறலாம்.

மோர்பி, ராஜ்கோட், படான் மற்றும் வதோதரா (குஜராத்); துர்க் மற்றும் பலோதபஜார் (சத்தீஸ்கர்); ஜலூர், உதய்பூர், பாலி, பார்மர் மற்றும் சிரோஹி (ராஜஸ்தான்); ஃபரிதாபாத் (ஹரியானா); மற்றும், ஜலந்தர் (பஞ்சாப்) இந்த 13 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2019 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தின் விதிகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை என்றாலும், குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் 2009 ஆம் ஆண்டில் சட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட விதிகளின் கீழ் உடனடியாக உத்தரவை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக் நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. 2020 ஜனவரியில் நடந்த டெல்லி கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிப்ரவரியில், குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கான விதிகள் வகுக்கப்படுவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார். இந்த விதிகளை வகுக்க மக்களவை மற்றும் மாநிலங்களவை முறையே ஏப்ரல் 9 மற்றும் ஜூலை 9 வரை கால அவகாசம் வழங்கியதாக ராய் தெரிவித்தார். சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்ட விதிகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை என்றும்,கொரோனா தடுப்பூசி முடிந்ததும் சட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

குடியுரிமை (திருத்தம்) சட்டம் என்பது முந்தைய  1955 குடியுரிமைச் சட்டத்தை திருத்தி வடிவமைக்கப்பட்டு உள்லது, இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அகதிகளை குடியுரிமை பெற தகுதியுடையவர்களாக ஆக்குகிறது. மேலும், இந்த மசோதா நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள உள் வரி அனுமதி பகுதிகளுக்கும் பிராந்தியங்களில் ஆறாவது அட்டவணையின் கீழ் வரும் பகுதிகளுக்கும் விலக்கு அளிக்கிறது. இந்த சமூகங்களின் உறுப்பினர்கள் 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த பின்னர் இது பொருந்தும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  (சிஏஏ)எதிரான 150 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன.

மேலும் செய்திகள்