சண்டீகரில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு
பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர்,
அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை காலை 5 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகள் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மராட்டியம், கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா 2-வது அலை அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.