சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எம்.ஒய். இக்பால் காலமானார்
சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியான எம்.ஒய். இக்பால் காலமானார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியாக பதவி வகித்தவர் எம்.ஒய். இக்பால். புதுடெல்லியில் வசித்து வந்த இவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70. கடந்த 1951ம் ஆண்டு பிப்ரவரி 13ந்தேதி பிறந்த இக்பால் பின்னர் ராஞ்சி பல்கலை கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் முடித்துள்ளார்.
வழக்கறிஞர் படிப்பில் தங்க பதக்கமும் பெற்றுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு சிவில் நீதிமன்றத்தில் தனது பயிற்சியை தொடங்கிய அவர், கடந்த 1993ம் ஆண்டு பாட்னா ஐகோர்ட்டின் ராஞ்சி கிளையில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
இதன்பின் கடந்த 1996ம் ஆண்டு பாட்னா ஐகோர்ட்டின் நீதிபதியாகவும், கடந்த 2000ம் ஆண்டு நவம்பரில் ஜார்கண்ட் ஐகோர்ட்டு நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2010ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்பின்னர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பரில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் அவர் ஓய்வு பெற்றார்.