சிங்கப்பூரில் இருந்து 352 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு
சிங்கப்பூரில் இருந்து, இந்திய விமானப்படையை விமானத்தில், 352 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
அந்த வாகையில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து, இந்திய விமானப்படையை சேர்ந்த, ஐ.எல்., 76 ரக போக்குவரத்து விமானம் மூலம் 352 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. இதை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தினார். டெல்லியில் நிலவி வரும் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.