கேரளாவில் இன்று 3,502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 14 பேர் பலி

கேரளாவில் இன்று 3,502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-06 13:00 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் இன்று ஒரேநாளில் 3,502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 41 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 29 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு பின் இன்று ஒரே நாளில் 1,898 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 6 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்