புனித வெள்ளி தினம்; ‘ஏசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுபடுத்துகிறது’; பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட தினமான புனித வெள்ளியை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பாக அனுசரித்தனர்.
இதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘ஏசு கிறிஸ்துவின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களை புனித வெள்ளி நமக்கு நினைவுபடுத்துகிறது. இரக்கத்தின் முழு உருவமாக இருந்த அவர், ஏழைகளுக்கு சேவை செய்வதிலும், நோயாளிகளை குணப்படுத்துவதிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்’ என்று கூறியிருந்தார்.