பிறந்து இரண்டு வாரங்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா

குஜராத்தில் பிறந்து 15 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-02 08:30 GMT
அகமதாபாத்,

குஜராத்தில், பிறந்து 15 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறுகையில், கடும் வயிற்று போக்குடன் குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரை கவனித்தவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்