கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புத்த மத தலைவர் தலாய்லாமா

புத்த மத தலைவர் தலாய்லாமா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.;

Update:2021-03-07 06:15 IST
தர்மசாலா,

இந்தியாவில் கடந்த 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

அந்தவகையில் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா நேற்று இமாசல பிரதேச தலைநகர் தர்மசாலாவில் உள்ள மண்டல ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதற்காக இந்திய அரசுக்கும், இமாசல பிரதேச மாநில அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் தைரியத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்