தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு நடப்பு நிதி ஆண்டில் வட்டி 8.5 சதவீதம்

நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-04 21:31 GMT
புதுடெல்லி,

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு நடப்பு (2020-21) நிதி ஆண்டில் 8.5 சதவீதம் வட்டி வழங்குவது என இ.பி.எப். அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பின் முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்த மத்திய அறங்காவலர் வாரியம், காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில், மத்திய தொழிலாளர் நல மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார் தலைமையில் நேற்று கூடி இந்த முடிவை எடுத்தது. இதை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் ஒரு அறிக்கையின் மூலம் உறுதி செய்தது. 

இந்த முடிவு, முறைப்படி மத்திய நிதி அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படும். நிதி அமைச்சகம் தனது ஒப்புதலை வழங்கிய உடன் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இந்த வட்டி செலுத்தப்பட்டுவிடும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 5 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சந்தாதாரர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்