மோடி அரசின் பணமதிப்பிழப்பு காரணமாக இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது - மன்மோகன் சிங் எச்சரிக்கை
மோடி அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு காரணமாக இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்
கேரளாவில் உள்ள ராஜீவ் காந்தி மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி மூலம் பேசியமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-
மாநிலங்கள் அதிகப்படியாக கடன் வாங்குவதால் மத்திய அரசின் பொது நிதி சீர்குலைந்து வருகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. நடுத்தர மற்றும் சிறு தொழில்களை இது மோசமாக பாதிக்கக்கூடும். மாநில அரசுகளுடன், மத்திய அரசு கலந்தாலோசிப்பதில்லை என்று கூறிய மன்மோகன் சிங், 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நாட்டை சீர்குலைத்து விட்டது.பிரதமர் மோடி அரசு பொருளாதார விஷயங்களில் மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதார மற்றும் அரசியல் தத்துவத்தின் மூலக்கல்லாக இருந்த கூட்டாட்சி மற்றும் மாநிலங்களுடனான வழக்கமான ஆலோசனைகளை தற்போதைய மத்திய அரசு கடைபிடிப்பது இல்லை என கூறினார்.